வெறும் 8 நிமிட பாடலுக்காக ஒரு மாதம் படப்பிடிப்பு நடத்தும் ராஜமவுலி..!

 
ராஜமவுலி

ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெறவுள்ள 8 நிமிட பாடல் காட்சிக்காக ஒரு மாத காலம் படப்பிடிப்பு நடத்த இயக்குநர் ராஜமவுலி முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சுதந்திரப் போராட்டத்தை மையமாக வைத்து தெலுங்கு ராஜமவுலி உருவாக்கி வரும் படம் ஆர்.ஆர்.ஆர். ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் தேஜா, ஆலியா பட், சமுத்திரகனி உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாராகி வரும் படம் என்பதாலும், பாகுபலிக்கு பிறகு இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் படம் என்பதாலும், இதற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தாண்டு ஆகஸ்டு மாதம் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது.

ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக அந்த திட்டம் நடக்காமல் போனது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் இடம்பெறும் 8 நிமிட பாடல் காட்சி, படத்தின் திருப்புமுணை காட்சியாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

அதனால் அதற்காக மட்டும் ஒரு மாத காலம் படப்பிடிப்பை நடத்த இயக்குநர் ராஜமவுலி முடிவு செய்துள்ளாராம். இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள ஆர்.ஆர்.ஆர் பட பணிகள் விரைவில் முழு வடிவம் பெறவுள்ளன. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது. 
 

From Around the web