மஹாபாரதத்தை 10 பாகங்கள் கொண்ட படமாக எடுக்கும் ராஜமவுலி..!!

நிகழ்ச்சியொன்றில் பேசிய ராஜமவுலி தன்னுடைய அடுத்த படம் தொடர்பான அப்டேட்டை கொடுத்துள்ளார். இது திரைப்பட ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 
 
rajamouli

திரைப்படங்களை தயாரிப்பதற்கான தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி பெற்றுவிட்டது. இதனால் இந்திய சினிமாவில் சி.ஜி. தொழில்நுட்பத்துடன் கூடிய வரலாற்று புனைவு கதைகளை திரைப்படமாக்கும் போக்கு அதிகரித்துவிட்டது.

இதற்கு வித்திட்டவர் எஸ்.எஸ். ராஜமவுலி தான். அவருடைய பாகுபலி 1, பாகுபலி 2 மற்றும் ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்கள் தொழில்நுட்பத்தின் உச்சமாக முன்வைக்கப்படுகிறது. இவருடைய அடுத்தப் படம் என்னவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு பலரிடையே நிலவுகிறது.

முன்னதாக அவர் பேசுகையில் மகாபாரத் கதையை திரைப்படமாக்க வேண்டும் என்பது தன்னுடைய கனவு என ராஜமவுலி குறிப்பிட்டுள்ளார். அதனால் ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு பிறகு ராஜமவுலி மகாபாரதத்தை மையமாக வைத்து படம் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அண்மையில் நடந்த நேர்காணலில் ராஜமவுலியின் மகாபாரதக் கதையை படமாக்கும் கனவு குறித்த கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள அவர், இந்தியாவில் இருக்கும் மகாபாரதக் கதையை படித்து திரைக்கதையை அமைக்க தனக்கு குறைந்தது ஓராண்டுகளாவது தேவைப்படும்.

மகாபாரத்தை என் பாணியில் எடுப்பேன். கதையின் ஜீவனை மாற்றாமல் கதாபாத்திரங்கள் மட்டும் மேம்படுத்தப்படும். அதற்கான திரைக்கதையை எழுதி முடித்துவிட்டு, அந்த படத்தில் யார் நடிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வேன். தற்போது, ​​இது 10 பாகங்கள் கொண்ட படமாக இருக்கும் என்று மட்டுமே என்னால் யூகிக்க முடிகிறது என ராஜமவுலி தெரிவித்துள்ளார்.
 

From Around the web