ஒரே நாளில் ரஜினி - கமல் படங்கள் ரிலீஸ்?

 
1

கடந்த மாதம் பொங்கல் பண்டிகையின் போது விஜய்யின் ‘வாரிசு’, அஜித்தின் ‘துணிவு’ படங்கள் ஒன்றாக வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த நிலையில், 18 ஆண்டுகளுக்கு பின்னர் கமல் மற்றும் ரஜினியின் படங்கள் நேருக்கு நேராக மோத வாய்ப்பு உள்ளதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. கமலின் இந்தியன் 2 திரைப்படமும், ரஜினியின் ஜெயிலரும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Kamal-Rajini

கடந்த 2005-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி ரஜினிகாந்தின் ‘சந்திரமுகி’ கமல்ஹாசனின் ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ ஆகிய படங்கள் ஒன்றாக திரைக்கு வந்தன. இதில் சந்திரமுகி 500 நாட்களை கடந்து ஓடியது. அதேநேரம் மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதன் பின்னர் ரஜினி - கமல் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகவில்லை. 

இந்த நிலையில் ஜெயிலர் மற்றும் இந்தியன் 2 திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. ஜெயிலர் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். அவரது முந்தைய படமான பீஸ்ட் ஏமாற்றம் அளித்த நிலையில், ஜெயிலர் திரைப்படம் அவருக்கு கம்பேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயிலரில் ரஜினியுடன் மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், தமன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். தற்போது ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் முழுவீச்சில் நடந்து வருகிறது. 

Rajini-Kamal

இதேபோன்று இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் ஆந்திராவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் தென்னாப்பிரிக்கா செல்ல உள்ளனர். இந்தியன் 2 படத்தில் அதிக எண்ணிக்கையில் நடிகர்கள் இடம் பெற்றுள்ளனர். கமலுடன் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள். அனிருத் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். 1996-ல் இந்தியன் படத்தின் முதல் பாகம் வெளியானது. 27 ஆண்டுக்கு பின்னர், 2-ம் பாகம் உருவாக்கப்படுவதாலும், இயக்குனர் ஷங்கர் என்பதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது.

From Around the web