தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தங்கச் செயின் வழங்கி ரஜினி பாராட்டு..!!

 
1

ரஜினி நடித்த ‘அண்ணாத்த’ படம் தீபாவளி பண்டிகையின்போது வெளிடப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு, படத்தின் இயக்குநர் சிவாவை ரஜினி அவரது இல்லத்துக்குச் சென்று பாராட்டி, அவருக்குத் தங்கச் செயின் பரிசளித்தார்.

இந்நிலையில், ‘அண்ணாத்த’ படத்தின் 50-வது நாள் வெற்றி விழாவையொட்டி தொழில்நுட்பக் கலைஞர்களை சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு நேற்று அழைத்திருந்தார் ரஜினி. இயக்குநர் சிவா, ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிசாமி, இசையமைப்பாளர் டி.இமான், படத்தொகுப்பாளர் ரூபன், கலை இயக்குநர் மிலன் உள்ளிட்டோர் இவ்விழாவில் பங்கேற்றனர்.

படத்தின் வெற்றியால் உற்சாகமடைந்த ரஜினிகாந்த், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரையும் பாராட்டி, ஒவ்வொருவருக்கும் தங்கச் செயின் வழங்கி பாராட்டி யுள்ளார்.

இதைத்தொடர்ந்து ரஜினி அவர்களிடம் பேசும்போது, “அண்ணாத்த படம் ‘நெட்ஃபிளிக்ஸ்’-ல் வெளியான பிறகும் கூடதமிழ்நாட்டில் பல தியேட்டர்களில் 50 நாட்களைக் கடந்தும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தியேட்டர் உரிமையாளர்களும் என்னை போனில் தொடர்பு கொண்டு, தங்களுக்கு நல்ல லாபம் கிடைத்ததாகக் கூறி சந்தோஷப்பட்டார்கள்.

‘நெட்ஃபிளிக்ஸ்’-ல் வெளியான எல்லா மொழிகளிலும் குறிப்பாக இந்தியில் மிகப் பெரிய வெற்றிபெற்றுள்ளது. உங்கள் எல்லோரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.

From Around the web