ரஜினி, அக்‌ஷய் குமாரை தொடர்ந்து பியர் கிரில்ஸுடன் காட்டுக்கு செல்லும் பிரபல நடிகர்..!

 
மேன் வெர்ஸஸ் வைல்டு
உலகளவிலான ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற மேன் வெர்ஸஸ் வைல்டு நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமாரை தொடர்ந்து பிரபல பாலிவுட் நடிகர் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.

டிஸ்கவரி சேனலில் ஒளிப்பரப்பாகும் ’மேன் வெர்ஸஸ் வைல்டு’ நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வரவேற்புள்ளது. இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸுக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளனர். கடந்தாண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக பிரதமர் மோடி இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அதை தொடர்ந்து நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் அக்‌ஷய் குமார் உள்ளிட்டோரும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர். இதற்கு முன்னதாக முன்னாள் அமெரிக்க அதிபர் ஓபாமா பங்கேற்றது இந்த நிகழ்ச்சியை வைரலாக்கியது.

இந்நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் மேன் வெர்ஸஸ் வைல்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் மாலத்தீவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.

From Around the web