இந்த இரண்டு படங்களை தொடர்ந்து சினிமாவை விட்டு விலகும் ரஜினி..!

 
ரஜினிகாந்த்

அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்தவுடன் நடிகர் ரஜினிகாந்த் சினிமாவை விட்டு விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறுத்தை சிவா இயக்கும் அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம் வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த படத்துக்கு பிறகு ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தை பிரபல இயக்குநர் அகத்தியனின் மருமகனான தேசிங்கு பெரியசாமி இயக்குவார் என்று கூறப்படுகிறது. 

அதை தொடர்ந்து இளைய மகள் சவுந்தர்யா தயாரிக்கும் படத்தின் ரஜினி நடிக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றனர். இந்த படத்தை அவருடைய மருமகன் தனுஷ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுதொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விரு படங்களையும் முடித்தவுடன் ரஜினிகாந்த் சினிமாவை விட்ட விலக முடிவு செய்துள்ளாராம். அதற்கு பிறகு அரசியலுக்கு வரமாட்டேன் என்று கூறிவிட்ட அவர், ஆன்மிக பயணம், குடும்பத்துடன் இருப்பது உள்ளிட்ட காரியங்களில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது

From Around the web