மகள்கள் தயாரிப்பில் தனுஷ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினி..!
 

 
தனுஷுடன் ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்துக்காக அவருடைய குடும்பத்தினர் அனைவரும் ஒன்றிணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்தாண்டு தீபாவளிக்கு இப்படம் வெளியாகிறது. அதை தொடர்ந்து அவர் நடிக்கும் அடுத்த படம் தொடர்பான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

முன்னதாக தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களாக இருக்கும் தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்பராஜ் உள்ளிட்டோர் ரஜினியை சந்தித்து கதை சொன்னதாக கூறப்பட்டது. ஆனால் அதுதொடர்பாக அடுத்தக்கட்ட பணிகள் எதுவும் நடக்கவில்லை.

இதற்கிடையில் நடிகர் தனுஷ் அடுத்ததாக இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிப்பதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. இதுதொடர்பான செய்திகள் முன்னதாக வெளியாகின. ஆனால் இப்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரமாண்டமாக பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த படத்தை ரஜினிகாந்தின் மகள்களான ஐஸ்வர்யா தனுஷ் மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் இருவரும் சேர்ந்து தயாரிக்கின்றனர். இதுதொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

From Around the web