ரஜினி 171 படத்தின் தலைப்பு வெளியானது..!

 
1

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தமிழின் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படம் உருவாக உள்ளது. இந்த திரைப்படத்தில், பேட்டை, தர்பார், ஜெயிலர், வேட்டையன் படங்களை தொடர்ந்து 5வது முறையாக ரஜினி படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

சன் பிக்சர்ஸின் அதிகாரப்பூர்வ யூடியூப் தளத்தில் 3.16 நிமிடங்களுக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த டைட்டில் டீசரில், ஒரு குடோனில் கொள்ளையர்களான எதிரிகள், தங்க கட்டிகளையும், நகைகளையும், சிலைகளையும், தங்க வாட்ச்களையும் கொள்ளையர்கள் தனித்தனியாக பிரிப்பது போல் உள்ளது. லோகேஷ் படம் என்றாலே பெரும்பாலும் இரவு நேரத்தில் படமாக்கப்படும் என்ற கருத்தில் கூலி திரைப்படமும் சேர்கிறது. தொலைப்பேசியில் பேசும் ஒருவர் ரஜினி உள்ளே வரப்போகும் தகவலை கூறுகிறார். அப்போது ரஜினி கூலிங் க்ளாஸ் போட்டுக்கொண்டு சண்டைப்போடும் காட்சி மாஸாக அமைந்துள்ளது.

‘ரங்கா’ திரைப்படத்தின் வசனமான “அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள் தப்பெண்ண சரியேன்ன எப்போதும் விளையாடு, அடப்பாவி என்பார்கள் தப்பாக நினைக்காதே, எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே” என்ற வசனம் ரஜினியின் பழைய திரைப்படங்களை நினைவுக்கு கொண்டுவருகிறது. சரத்குமார் நடிப்பில் வெளியான ‘கூலி’ படத்தின் தலைப்பு மீண்டும் இப்படத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

’கூலி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரன்பீர் சிங், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்த நிலையில், ரஜினியின் 171வது படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இந்த படத்தில் ரஜினியை இளமையாகக் காட்ட டீ- ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

From Around the web