43வது திருமண நாளை கொண்டாடிய ரஜினி - லதா தம்பதி..!

 
1

கோலிவுட்டில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருகின்றனர் நடிகர் ரஜினிகாந்த்- லதா தம்பதி. இவர்களது திருமணம் கடந்த 1981ம் ஆண்டு பிப்ரவரி 26ல் நடந்தது. இவர்களது காதல் மலர்ந்தது ஒரு சுவாரஸ்யமான கதை. ‘தில்லு முல்லு’ பட சமயத்தின் போது நடிகர் ரஜினிகாந்தை தங்கள் கல்லூரி சிறப்பிதழுக்காக பேட்டி எடுக்க எத்திராஜ் கல்லூரி மாணவிகள் சிலர் வந்தனர். அவர்களில் ஒருவராகதான் லதா வந்துள்ளார். லதாதான் ரஜினியைப் பேட்டி எடுத்துள்ளார். லதாவின் கேள்விகளும் பொறுப்பும் அழகும் ரஜினியை வெகுவாக ஈர்த்தது.

திருமணம் பற்றி லதா கேள்வி கேட்டதும் “உங்களை போல பெண் கிடைத்தால் உடனே திருமணம் தான்” என மறைமுகமாக லதாவுக்கு தனது விருப்பத்தையும் தெரிவித்தார் ரஜினி. பின்பு குடும்பத்தார் சம்மதத்துடன் இவர்களது திருமணம் திருப்பதியில் எளிமையாக நடந்தது.

திருமணம் முடிந்து 43 வருடங்கள் ஆகி இருக்கிறது. நேற்று தங்கள் திருமண தினத்தை இவர்கள் கொண்டாடிய நிலையில் ரசிகர்களும் திரைத்துறையைச் சேர்ந்தவர்களும் இவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.


இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் செளந்தர்யா திருமண நாளில் லதா-ரஜினி இருவரும் சேர்ந்து எடுத்தப் புகைப்படத்தைத் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ‘என்னுடைய டார்லிங் அம்மா, அப்பா இருவரும் ஒன்றாக இணைந்து 43வது வருடத்தில் இருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் எப்போதுமே பக்கபலம்! 43 வருடங்களுக்கு முன்பு இருவரும் மாற்றிக் கொண்ட செயின், மோதிரத்தை ஒவ்வொரு வருடமும் திருமண நாளில் மாற்றிக் கொள்வார்கள். லவ் யூ போத்!’ எனக் கூறியுள்ளார்.

From Around the web