மும்பையில் வந்திறங்கும் மொய்தீன் பாய்- லால் சலாம் ரஜினி ஃபர்ஸ்ட் லுக்..!!

லால் சலாம் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் ரஜினிகாந்தின் முதல் பார்வை போஸ்டர் வெளிவந்துள்ள நிலையில், அது இணையதளத்தில் டாப் டிரெண்டிங்கில் உள்ளது. 
 
lal saalam

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் படம் லால் சலாம். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் ஹீரோவாக நடிக்கின்றனர். ரஜினிகாந்த் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில் அவருடைய கதாபாத்திரம் சிறப்புத் தோற்றமாக இருக்கும் என முன்பே கூறப்பட்டுவிட்டது. மும்பையில் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்குவதற்கான படப்பிடிப்பு அண்மையில் துவங்கி நடைபெற்று வந்தது. அதை உறுதி செய்யும் விதமாக அவருடைய கதாபாத்திர போஸ்டரை லால் சலாம் படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி கலவரமான மும்பையில் கெத்தாக ரஜினிகாந்த் நடந்து வருவது போன்று அவருடைய போஸ்டர் டிசைன் செய்யப்பட்டுள்ளது. லால் சலாம் படத்தில் ரஜினிகாந்தின் கதாபாத்திரப் பெயர் மொய்தீன் பாய். அவர் தொடர்பான காட்சிகள் படமாக்கப்படுவதால், போஸ்டரில் மொய்தீன் பாய் ஆட்டம் ஆரம்பம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


முன்னதாக இந்த படத்துக்கான முதற்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலை, செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டு வந்தது. அதையடுத்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. நடப்பாண்டு இறுதிக்குள் ஷூட்டிங்கை முடித்து, விரைவில் திரைக்கு கொண்டு வர படக்குழு முனைப்பு காட்டி வருகிறது.
 

From Around the web