இமயமலையில் இருந்து நெல்சனுக்கு வாழ்த்து சொன்ன தலைவர் ரஜினிகாந்த்..!

 
1

 சூப்பர் ஸ்டார், நெல்சன், அனிருத், சன் பிக்சர்ஸ் என மெர்சலான காம்போவில் ரிலீஸான ஜெயிலருக்கு சிறப்பான ஓபனிங் கிடைத்துள்ளது. இதனால், சரியான கம்பேக் கொடுப்பதற்காக காத்திருந்த ரஜினி, தற்போது வெறித்தனமாக சம்பவம் செய்துள்ளார். கடந்தாண்டு வெளியான ‘விக்ரம்’ படம் மூலம் கமல் கம்பேக் கொடுத்ததை போல, ஜெயிலரில் ரஜினியும் கம்பேக் கொடுத்துவிட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

கம்பேக் மட்டும் இல்லாமல் கதையிலும் விக்ரம் படத்தை ஜெயிலர் காப்பி அடித்துள்ளதாக விமர்சனங்களும் எழுந்தன. ஆனாலும், ரஜினிக்காக மட்டுமே ஜெயிலர் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருவதை பார்க்க முடிகிறது. கோலமாவு கோகிலா, டாக்டர் படங்கள் மூலம் திரும்பிப் பார்க்க வைத்த நெல்சன், அடுத்து இயக்கிய பீஸ்ட் படத்தால் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டார். விஜய்யை நம்ப வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன், தளபதியின் கேரியரையே சோலி முடித்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.

இதனால் ஜெயிலரில் கமிட்டான நெல்சனுக்கு, கடைசி நேரத்தில் ரஜினி நோ சொல்லிவிட்டதாக செய்திகள் வெளியாகின. இதற்கெல்லாம் சேர்த்து ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் விளக்கம் கொடுத்திருந்தார் ரஜினி. பீஸ்ட் தோல்வியால் ஜெயிலரில் இருந்து நெல்சனை தூக்கிவிடலாம் என பலரும் கூறினார்கள். ஆனால், கதை தான் தோற்கும் நல்ல இயக்குநர் தோற்க மாட்டார் என நெல்சனுக்கு இந்த வாய்ப்பை கொடுத்தேன் என ரஜினி பேசியிருந்தார்.

அதற்கு நியாயம் சேர்க்கும் விதமாக நெல்சன் ஜெயிலரை ஹிட் படமாக கொடுத்துவிட்டார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். அவர்களுடன் சேர்ந்து ஜெயிலர் ஹீரோ முத்துவேல் பாண்டியனான சூப்பர் ஸ்டார் ரஜினியும் தற்போது நெல்சனை பாராட்டியுள்ளாராம். இதுகுறித்து நெல்சனே தற்போது ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இமயமலை சென்றுள்ள சூப்பர் ஸ்டார், ஜெயிலர் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பைப் பார்த்து மிரண்டுவிட்டாராம். பின்னர் இமயமலையில் இருந்தே நெல்சனுக்கு மெசேஜ் அனுப்பிய ரஜினி, ‘கலக்கிட்டீங்க கண்ணா… சென்னை வந்ததும் சந்திப்போம்” எனக் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

From Around the web