ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று சுயசரிதையை எழுதும் முடிவிற்கு வந்த ரஜினி..!

தமிழ் சினிமாவில் இதுவரை எந்த ஒரு படமும் ஆயிரம் கோடி வசூல் செய்திராத நிலையில் அந்த சாதனையை கூலி திரைப்படம் நிகழ்த்தி காட்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. இன்னும் சில வாரங்களில் இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடையும் என்றும், ஜூன் அல்லது ஆகஸ்ட் மாதத்தில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வருகின்றன.
இப்படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக நெல்சனின் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. அநேகமாக கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு ஜெயிலர் 2 படப்பிடிப்பில் உடனடியாக ரஜினி இணைவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் தற்போது வந்த தகவலின் படி கூலி படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு ரஜினி தன் சுயசரிதையை எழுத இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
பல வருடங்களுக்கு முன்பே ரஜினி தன் சுயசரிதையை எழுத நினைத்ததாகவும், ஆனால் ஒரு சில காரணங்களால் சுயசரித்ததை எழுதும் முடிவை ரஜினி கைவிட்டதாகவும் சொல்லப்பட்டது. அதன் பிறகு சுயசரிதையை எழுதும் முடிவை ரஜினி எடுக்கவில்லை. அவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கவும் ஒரு சிலர் ஆசைப்பட்டனர். அவ்வளவு ஏன் தனுஷ் கூட ரஜினியின் வாழ்க்கை வரலாற்றில் ரஜினியாக நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்திருந்தார்.
ஆனால் ரஜினி தன் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பதை பற்றி எந்த ஒரு முடிவையும் சொல்லவில்லை. இருப்பினும் தொடர்ந்து ரஜினியின் ரசிகர்கள் அவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கும்படியும் அல்லது சுயசரிதையை எழுதும் படியும் ரஜினியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று ரஜினி தற்போது தன் சுயசரிதையை எழுதும் முடிவிற்கு வந்துள்ளதாக தெரிகின்றது. ரஜினி திரைத்துறைக்கு வந்து ஐம்பது வருடங்கள் ஆகின்றது. எனவே இந்த ஸ்பெஷலான வருடத்தில் ரஜினி தன் சுயசரிதையை எழுதும் முடிவை எடுத்திருப்பதாக தெரிகின்றது.
ஆனால் இத்தகவல் உண்மையா இல்லை வதந்தியா என்பது தெரியவில்லை. இருப்பினும் உண்மையிலேயே ரஜினி தன் சுயசரிதையை எழுதுவதாக முடிவெடுத்திருந்தால் அது ரசிகர்களுக்கு கண்டிப்பாக மகிழ்ச்சியான செய்தியாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.