மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் ரஜினிகாந்த்..!

 
வீடு திரும்பிய ரஜினிகாந்த்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நடிகர் ரஜினிகாந்த், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். இதுதொடர்பான விவரங்களை பார்க்கலாம்.

கடந்த 28-ம் தேதி குடும்பத்தினருடன் நடிகர் ரஜினிகாந்த் ‘அண்ணாத்த’ படம் பார்க்க சென்றார். அதை தொடர்ந்து உடல்நலனில் ஏற்பட்ட சிறிய பாதிப்பால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எவ்வித முன் அறிவிப்புமில்லாமல் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ரசிகர்களிடையே பதற்றத்தை உண்டாக்கியது. அதை தொடர்ந்து ட்விட்டரில் பதிவிட்ட சவுந்தர்யா ரஜினிகாந்த், ரத்த குழாய் திசு அழிவு காரணமாக தந்தை ரஜினிகாந்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவர் வீடு திரும்புவார் என்று தகவல் வெளியிட்டார்.

இதையடுத்து இரண்டு நாட்கள் மருத்துவமனையில் ஓய்வில் இருந்த ரஜினிகாந்த் இன்று குணமடைந்து வீடு திரும்பினார். இதுதொடர்பாக ஹூட் செயலியில் அவர் வெளியிட்டுள்ள ஆடியோவில், நான் நலமுடன் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 

From Around the web