மீண்டும் அண்ணாத்த படத்துக்காக ஹைதராபாத் பறந்த ரஜினிகாந்த்..!

 
மீண்டும் அண்ணாத்த படத்துக்காக ஹைதராபாத் பறந்த ரஜினிகாந்த்..!

சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று மீண்டும் ஹைதராபாத் நகருக்கு புறப்பட்டுச் சென்றார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் மூன்றாவது முறையாக நடித்து வரும் படம் ‘அண்ணாத்த’. சிறுத்தை சிவா இயக்கும் இந்த படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜெகபதி பாபு, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

மிக அதிக பொருட்செலவில் தயாராகும் இந்த படத்தின் சில காட்சிகள் கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு சென்னை தொடங்கி நடைபெற்று வந்தது. பிரமாண்ட அரங்குகள் அமைத்து ஷூட்டிங் நடைபெற்ற நிலையில், ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன.

இதனுடைய அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் ரஜினிகாந்த் ஹைதராபாத்துக்கு சென்றார். அங்கு நடைபெறும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு, மீண்டும் அவர் சென்னை திரும்பவுள்ளார்.

பக்கா கமர்ஷியல் பாணியில் உருவாகி வரும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மினா நடிப்பதாக சொல்லப்படுகிறது. குஷ்பு வில்லி கதாபாத்திரத்திலும் கீர்த்தி சுரேஷ் ரஜினியின் தங்கை கதாபாத்திரத்திலும் நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நயன்தாரா வழக்கறிஞராக கவுரவ வேடத்தில் நடிக்கிறார்.

தமிழ் ரசிகர்களுக்கு மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 

From Around the web