லால் சலாம் படத்தில் நடிப்பது குறித்து பரிசீலிக்கும் ரஜினி..!!

இதுவரை எடுக்கப்பட்ட லால் சலாம் படத்தின் காட்சிகளை பார்த்துவிட்டு, நடிகர் ரஜினிகாந்த் அந்த படத்தில் நடிப்பது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
laal salam

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘லால் சலாம்’. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் இருவரும்  ஹீரோவாக நடிக்கின்றனர். படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். இதுவரை விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டுள்ளன. இதற்கு பிறகு தான் ரஜினியின் காட்சிகள் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுவரை எடுக்கப்பட்ட படத்தின் காட்சிகள் ரஜினிக்கு போட்டு காண்பிக்கப்பட்டுள்ளது. அதை பார்த்த ரஜினி மிரண்டுபோய்விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. தன்னுடைய வீட்டில் இப்படிப்பட்ட ஒரு இயக்குநரா என்று பெருமை அடைந்துவிட்டாராம்.

அதனால் லால் சலாம் படத்தில் ஒப்புக்கொண்ட படி கேமியோவாக நடிக்கலாமா? அல்லது விரிவடைந்த கேமியோவாக தோன்றலாமா? என்பதை ரஜினிகாந்த் பரிசீலித்து வருகிறார். தனது தந்தை ரஜினிகாந்த் கையால் பாராட்டுக் கிடைத்ததை நினைத்து இயக்குநர் ஐஸ்வர்யா பூர்த்திவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

From Around the web