மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த்..!

 
அண்ணாத்த ரஜினிகாந்த்

விரைவில் தொடங்கவிருக்கும் ’அண்ணாத்த’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் தீவிரமாக தயாராகி வருகிறார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ‘அண்ணாத்த’. இந்த படத்தில் மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, ஜாக்கி ஷெராஃப், பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது.

முன்னதாக ஹைதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த் பங்கேற்று தன்னுடைய காட்சிகளை முடித்துக் கொடுத்தார். அதை தொடர்ந்து உடல்நல சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

அங்கிருந்து திரும்பி வந்த ரஜினி மீண்டும் அண்ணாத்த படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் மேற்கு வங்காளத்தில் நடைபெறவுள்ளது. சில நாட்கள் நடைபெறும் படப்பிடிப்பில் ரஜினி பங்கேற்கிறார்.

நாளை இதற்காக மேற்கு வங்காளம் செல்லும் ரஜினி, நான்கு நாட்கள் படப்பிடிப்பை முடித்துவிட்டு மீண்டும் சென்னை திரும்புகிறார். அதன்பின் அண்ணாத்த திரைப்படத்தின் டப்பிங் பணிகள் துவங்குகின்றன. இறுதியாக படம் நவம்பர் 4-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வருகிறது.
 

From Around the web