ரஜினிகாந்த், மோகன்பாபு தான் உண்மையான கேங்க்ஸ்டர்ஸ்- சொல்கிறார் வாரிசு நடிகர்..!

 
ரஜினிகாந்த் மற்றும் மோகன் பாபு

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மோகன் பாபு இருவருமே ஒரே காலகட்டத்தில் சினிமாவுக்குள் நுழைந்தனர். அன்று முதல் இப்போது வரை இருவருமே நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். இரண்டு நடிகர்களின் குடும்பங்களும் மிக நெருங்கிய நட்பு கொண்டிருப்பதும் இதில் சுவாரஸ்யமானது.

இவர்கள் இருவரும் தெலுங்கில் சேர்ந்து நடித்த பெத்தராயுடு திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இது தமிழில் வெளியான ‘நாட்டாமை’ படத்தின் ரீமேக்காகும். மேலும் இந்த படத்தில் நடிகர் விஜய்குமார் கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்தார். மோகன் பாபு சரத்குமார் கதாபாத்திரத்தில் நடித்தார்.


கொரோனா ஊடரங்கு முடிந்து அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்திரத்தில் தொடங்கியது. வெறும் ஒரு மாதத்திற்குள் ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் முடிக்கப்பட்டன. இரண்டாவது முறையாக ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்பு 60 சதவீத அண்ணாத்த பட ஷூட்டிங் முடிந்துவிட்டது.

அந்த படத்தில் பணியாற்றுவதற்காக நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் தங்கியிருந்த போது, மோகன்பாபு வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை மோகன் பாபுவின் மகளான மஞ்சு லக்ஷ்மி தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். 

இந்நிலையில் மோகன் பாபுவின் மகனாக மஞ்சு விஷ்ணு,  ரஜினிகாந்த் மற்றும் மோகன் பாபு சந்தித்து கொண்ட புகைப்படங்களை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் இவர்கள் தான் உண்மையான கேங்க்ஸ்டர்ஸ் என்று நடிகர் ரஜினிகாந்தை அவர் டேக் செய்துள்ளார்.

சினிமாவில் குறைந்த படங்களில் மட்டுமே நடித்து வரும் மோகன் பாபு, சமீபத்தில் வெளியான ‘நடிகையர் திலகம்’ படத்தில் எஸ்.வி. ரங்காராவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து சூரரைப் போற்று படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்தார்.

From Around the web