ரஜினியின் ஜெயிலர் பட ரிலீஸ் தேதி இதுதான்.!!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர்’ படத்தின் ரிலீஸ் தேதி தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
 
jailer

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ஜெயிலர். இந்த படத்தில் சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் மோகன்லாக் கவுரவ வேடத்தில் நடிக்கிறார்.

இது சன் பிக்சர்ஸ் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் நான்காவது படமாகும். கடந்த 2010-ம் ஆண்டு வெளியான எந்திரன் படத்தில் முதல்முறையாக சன் பிக்சர்ஸ் - ரஜினிகாந்த் கூட்டணி ஏற்பட்டது. அதையடுத்து பேட்ட, அண்ணாத்த உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

mohanlal rajinikanth

முன்னதாக வெளியான ‘அண்ணாத்த’ படம் படுதோல்வி அடைந்தது. அதற்காக ஏற்பட்ட பொருளாதார இழப்பை ஈடுசெய்யும் நோக்கில் ஜெயிலர் படம் உருவாகி வருகிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இது  ரஜினியுடன் அவர் கைக்கோரிக்கும் மூன்றாவது படமாகும். 

இந்த படம் தீபாவளி வெளியிடாக ரிலீஸாகும் என்று தகவல்கள் சொல்லப்பட்டன. ஆனால் அதற்கு முன்னதாகவே, ஆகஸ்டு 15-ம் தேதி ஜெயிலர் படம் வெளியாகிவிடக் கூடும் என்று கூறப்படுகிறது. இது ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயிலர் படத்தை தொடர்ந்து, மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ’லால் சலாம்’, த.ச. ஞானவேல்ராஜா இயக்கும் வேறொரு புதிய படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். குறிப்பாக லால் சலாம் படத்தில் இவர் கவுரவ வேடத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. 
 

From Around the web