அயோத்தி படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்! படக்குழுவினர் மகிழ்ச்சி..!

 
1

அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘அயோத்தி’. இந்தப் படத்தில், ‘குக் வித் கோமாளி’ புகழ், போஸ் வெங்கட், பிரீத்தி அஸ்ராணி, அஞ்சு அஸ்ராணி, யஷ்பால் ஷர்மா ஆகியோர் நடித்துள்ளனர்.

Sasikumar

டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரித்துள்ள இந்தப் படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. மனிதத்தையும் மத நல்லிணக்கத்தையும் பேசிய இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்தப் படம் ஜீ5 ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அயோத்தி படத்தை பார்த்து படக்குழுவை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், “அயோத்தி.. நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம். முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி. தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்!” எனக் குறிப்பிட்டு உள்ளார்.இதற்கு நன்றி தெரிவித்து சசி குமார் வெளியிட்டுள்ள பதிவில், “நடிகர் எனக் குறிப்பிடாமல், நண்பர் என்று சொன்னதிலேயே மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், மிக எளிய படைப்பாக வந்திருக்கும் அயோத்தி படத்தை பார்த்துப் பாராட்டியது நல்ல படைப்புகளுக்கான பெரிய நம்பிக்கை கொடுக்கிறது மிக்க நன்றி” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

From Around the web