‘விடுதலை‘ படக்குழுவை புகழ்ந்து பேசிய ரஜினிகாந்த்..!!

 
1

வெற்றிமாறன் இயக்கத்தில் இளையராஜா இசையில் சூரி, விஜய்சேதுபதி மற்றும் பவானிஸ்ரீ நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘விடுதலை‘. இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்று வருகிறது. இந்த படத்தின் சிறப்பு காட்சி நடிகர் ரஜினிகாந்திற்கு பிரத்யேகமாக திரையிட்டு காட்டப்பட்டது. தயாரிப்பாளர் எல்ரெட் குமார், இயக்குனர் வெற்றிமாறன், சூரி ஆகியோரிடம் படத்தைப் பார்த்து பாராட்டிப் பேசியுள்ளார்.

இப்படத்தை பார்த்துவிட்டு ரஜினி வெளியிட்ட பதிவு, “ விடுதலை….இதுவரை தமிழ்த் திரையுலகம்! பார்த்திராத கதைக்களம். இது ஒரு திரைக்காவியம் சூரியின் நடிப்பு – பிரமிப்பு, இளையராஜா – இசையில் என்றும் ராஜா, வெற்றிமாறன் – தமிழ் திரையுலகின் பெருமை, தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இரண்டாவது பாகத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்“ என்று நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

From Around the web