வெற்றிமாறனையும், சூரியையும் மாறி... மாறி... புகழ்ந்து தள்ளிய ரஜினிகாந்த்..!!
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்த ‘விடுதலை’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக சினிமா ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் நேர்மறையான விமர்சனங்களை கூறி வருகின்றனர்.
தொடர்ந்து விடுதலை படம் பார்ப்பதற்காக மக்கள் கூட்டமும் அலைமோதுகிறது. விடுதலை படத்தை பார்த்த மற்ற திரையுலக பிரபலங்கள் வெற்றிமாறன் மற்றும் சூரியை பாராட்டு வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் ரஜினிகாந்த் விடுதலை படத்தை பார்த்தார்.
— Rajinikanth (@rajinikanth) April 8, 2023
அவருக்காக தயாரிப்பு நிறுவனம் சிறப்பு காட்சியை வெளியிட்டு இருந்தது. அதை பார்த்துவிட்டு இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் சூரி உள்ளிட்ட படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டினர். மேலும் படம் பார்த்துவிட்டு சமூகவலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ள ரஜினிகாந்த், ‘விடுதலை’ இதுவரை தமிழ் திரையுலகம் பார்த்திராத ஒரு கதைக்களம். இது ஒரு திரை காவியம். சூரியின் நடிப்பு பிரம்மிப்பு, இளையராஜா இசையில் என்றும் ராஜா, வெற்றிமாறன் தமிழ் திரை உலகின் பெருமை, தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இரண்டாவது பாகத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.