அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்...!

 
ரஜினிகாந்த்

அமெரிக்காவில் 15 நாட்கள் தங்கியிருந்து மருத்துவ பரிசோதனைகளை முடித்துவிட்டு இன்று அதிகாலை நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பியுள்ளார்.

கடந்த மாதம் உடல்நல சிகிச்சைக்கு வேண்டி நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு சென்று சில நாட்கள் ஓய்வெடுத்து சிகிச்சையை முடித்துக்கொண்டு சென்னை திரும்ப மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

அவருடன் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா மற்றும் அவருடைய இரண்டு மகன்கள் உடன் இருந்தனர். அமெரிக்காவில் ரஜினி தங்கியிருந்த போது, வெளிநாட்டு வாழ் தமிழர்கள் அவரை சந்தித்து பேசிய புகைப்படங்கள் அவ்வப்போது சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகின.

இந்நிலையில் அமெரிக்காவில் சிகிச்சை முடிந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பியுள்ளார். இன்று அதிகாலை அவர் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவர்க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மருத்துவ பரிசோதனை நல்லபடி முடிந்ததாக கூறினார். விரைவில் அவர் அண்ணாத்த படத்திற்கான டப்பிங் பணிகளை மேற்கொள்ளவுள்ளார். இப்படம் வரும் நவம்பர் 4-ம் தேதி தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

From Around the web