களைக்கட்டும் ஜெயிலர் பட ப்ரோமோஷன்- அடுத்த சம்பவம் லோடிங்க்..!!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படம் ஆகஸ்டு 10-ம் தேதி வெளியாகவுள்ளதை அடுத்து, படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் வேகமெடுத்துள்ளன.
 
jailer

கோலாமாவு கோகிலா படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். இவருடைய இரண்டாவது படம் டாக்டர் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்ததன் மூலம், மூன்றாவதாக விஜய் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி உருவான படம் தான் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 2022-ம் ஆண்டு வெளியான இப்படம் படுதோல்வி அடைந்தது.

அதற்கு காரணம் திரைக்கதையில் தொடர்ந்து விஜய் தலையிட்டு வந்தார் என்றும், அதனால் செய்யப்பட்ட மாற்றங்களால் படம் தோல்வி அடைந்ததாகவும் கூறப்பட்டன. அதனால் தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பையும் நெல்சனுக்கு சன் பிக்சர்ஸ் வழங்கியது. அதுதான் ஜெயிலர். ரஜினிகாந்த், மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

jailer

கடந்த சில மாதங்களுக்கு முன்பு படத்தின் ஷூட்டிங் அனைத்தும் முடிவுக்கு வந்தன. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. படம் வரும் ஆகஸ்டு 10-ம் தேதி வெளியிடப்படுகிறது. இதை முன்னிட்டி ஏற்கனவே படத்தின் முதல் சிங்கிளான ‘காவாலா’ பாடல் வெளியிடப்பட்டது. அது பட்டித் தொட்டி எங்கும் ஹிட்டடித்து ஜெயிலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள மற்றொரு பாடலை இரண்டாவது சிங்கிளாக படக்குழு வெளியிடுகிறது. அதற்கான அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பகிரப்பட்டுள்ள போஸ்டரில் ரஜினிகாந்த் ஏதோ மாஸான சம்பவம் செய்வது போன்று உள்ளது. அதனால் இது ஹீரோவுக்கான எழுச்சி பாடலாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

From Around the web