ரிலீஸ் அப்டேட்டுடன் வந்திறங்கிய ஜெயிலர்..!!

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதி கிளிம்ப்ஸ் காட்சிகளுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
jailer

தமிழில் கோலமாவு கோகிலா, டாக்டர் படம் மூலம் சினிமாவில் கவனமீர்த்தவர் நெல்சன் திலீப்குமார். இவருடைய இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜெயிலர். ரஜினிகாந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில், மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளாமே நடித்துள்ளது. 

இந்த படத்தில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்கிற பெயரில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் வேகம் எடுத்துள்ளன.

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு திரைக்கு வருகிறது. அதற்காக வெளியிடப்பட்டுள்ள படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள் பலருடைய கவனத்தையும் பெரிதும் ஈர்த்துள்ளது.


வெறும் சாதாரண அப்டேட் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகளுடன் ஜெயிலர் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது ரசிகர்களை பெரிதும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. இப்போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. 
 

From Around the web