ரஜினி செய்த அதிரடி காரியம்..!!

விரைவில் ஜெயிலர் படம் வெளிவரவுள்ள சூழலில் நடிகர் ரஜினிகாந்த் தனது சம்பளத்தை குறைத்துக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
rajini

பல ஆண்டுகளாக தமிழ் சினிமா மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவுக்கும் சூப்பர்ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த். தற்போது நெல்சன் இயக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்ஹ்டு முடித்துள்ள அவர், தற்போது மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் ‘லால் சலாம்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதையடுத்து அவர் நடிக்கும் 170-வது படத்தை த.ச. ஞானவேல் இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தையும் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது. இந்த படம் சமூகம் சார்ந்த பார்வையை விரிவடையச் செய்யும் விதத்தில் தயாராகவுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது இவ்விரண்டு படங்களிலும் நடிப்பதற்கு ரஜினிகாந்த் ஒப்புக்கொண்டுள்ள சம்பள விவரங்கள் தெரியவந்துள்ளன. அதன்படி தனது 170 மற்றும் லால் சலாம் படங்களுக்கு சேர்த்து ரூ. 105 கோடி சம்பளம் பெறுகிறார் ரஜினி. 

அதற்கு காரணம், முன்னதாக அவருடைய நடிப்பில் வெளியான அண்ணாத்த படம் பெரியளவில் வெற்றி அடையவில்லை. ஆனால் அந்த படத்துக்கு 110 கோடி வாங்கியதாக கூறப்படுகிறது. படம் படுதோல்வி அடைந்ததால் ரஜினியின் மார்க்கெட் மோசமாக சரிந்துள்ளது. அதன்காரணமாகவே தற்போது பெரியளவில் தனது சம்பளத்தை அவர் குறைத்துக் கொண்டுள்ளார். 


 

From Around the web