தனியாக தலைவி படம் பார்த்த ரஜினிகாந்த்..! என்ன சொன்னார் தெரியுமா..?

 
தலைவி படம் பார்த்த ரஜினிகாந்த்

அரவிந்த் சாமி, கங்கனா ரணாவத் நடித்துள்ள ‘தலைவி’ படத்தை பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவுக்கு பாராட்டுக்களை தெரிவித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் ஏ.எல். விஜய் திரைப்படமாக எடுத்துள்ளார். தலைவி என்கிற பெயரில் வெளியாகியுள்ள அந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார்.


மேலும் அரவிந்த் சாமி, மதுபாலா, நாசர், சமுத்திரக்கனி என பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்டுள்ளனர். கடந்த செப்டம்பர் 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு மட்டும் தலைவி படம் பிரத்யேகமாக திரையிட்டு காண்பிக்கப்பட்டுள்ளது. ஆர்வமாக படம் பார்த்த அவர், படக்குழுவுக்கு பாராட்டுக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக இயக்குநர் ஏ.எல். விஜய்க்கு தனிப்பட்ட வகையில் அவர் பாராட்டுக்களை தெரிவித்ததாக தெரியவந்துள்ளது.
 

From Around the web