ரஜினிகாந்த் இதையெல்லாம் சாப்பிடவே மாட்டாராம்...அவரே சொன்ன தகவல்..!

ரஜினியின் நடிப்பில் கடைசியாக வெளியான வேட்டையன் திரைப்படம் வணீக ரீதியாக வெற்றிபெற்றாலும் விமர்சன ரீதியாக கலவையான வரவேற்பையே பெற்றது.
எனவே தன் அடுத்த திரைப்படமான கூலி படத்தை விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றிபெற செய்யவேண்டும் என தீவிரமாக இருக்கின்றார் ரஜினி. அதைத்தவிர ஆயிரம் கோடி வசூலை கூலி பெறவேண்டும் என்ற முனைப்போடும் தலைவர் இருப்பதாக தெரிகின்றது. இப்படத்தை தொடர்ந்து நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் 2 என்ற திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார் ரஜினி.
இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இவ்வாறு 73 வயதிலும் ரஜினி சுறுசுறுப்பாக அதே வேகத்துடன் இருக்கின்றார் என்றால் அதற்கு அவரின் ஆரோக்கியமான உணவு முறைகள் மற்றும் பழக்கங்கள் தான் காரணமாகும். அந்த வகையில் ரஜினி வெள்ளை நிற பொருட்களை சாப்பிடுவதை அறவே தவிர்த்துவிட்டாராம்.
பால், தயிர், சோறு, வெண்ணை போன்ற வெள்ளை நிறத்தில் இருக்கும் பொருட்களை ரஜினி சாப்பிடுவதே இல்லையாம். மேலும் அளவுடன் அதே சமயத்தில் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே ரஜினி சாப்பிடுகிறாராம். நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை தவறாமல் செய்து வருவதாக ரஜினியே ஒரு நிகழ்ச்சியில் கூறியிருக்கின்றார்.
இவ்வாறு ரஜினி கட்டுக்கோப்பாக இருப்பதால் தான் அன்றைக்கு பார்த்தது போலவே தற்போதும் அதே வேகத்துடனும் சுறுசுறுப்புடனும் இருக்கின்றார் என தெரிகின்றது. உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொண்டால் தான் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என தலைவர் அடிக்கடி சொல்வார். அதுபோல தான் அவர் நடந்தும் வருகின்றார்.அதன் காரணமாக தான் அவரால் இன்றளவும் சுறுசுறுப்பாக இயங்க முடிகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.