விரைவில் சென்னை திரும்பும் ரஜினிகாந்த்- வந்தவுடன் அமெரிக்கா செல்கிறார்..!

 
ரஜினிகாந்த்

அண்ணாத்த படத்தின் பணிகள் முடிந்ததும் இந்த வாரம் சென்னை திரும்பும் ரஜினிகாந்த் உடனடியாக அமெரிக்க புறப்பட்டுச் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா இரண்டாவது அலை காரணமாக தெலங்கானாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும் படத்தை விரைவாக முடிக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் மே 10-ம் தேதி அண்ணாத்த படத்தின் அனைத்துக் கட்ட படப்பிடிப்பும் முடிவடையவுள்ளது. ரஜினிகாந்த் தொடர்பான காட்சிகள் இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் முடிக்கப்பட்டுவிடும் என்று சொல்லப்பட்டுள்ளது.

அண்ணாத்த படத்தை தீபாவளிக்கு வெளியிடும் நோக்கில் படக்குழுவினர் வேகமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ரஜினிகாந்த் உடனடியாக சென்னை திரும்புகிறார். அதன்பின் அவர் அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மருத்துவமனை பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாகவும், அதற்காக ரஜினிகாந்த் அமெரிக்க செல்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் ரஜினிகாந்த் ஜூன் மாதம் அமெரிக்கா செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. 
 

From Around the web