கேப்டன் விஜயகாந்தின் நினைவு தினத்திற்கு ரஜினி கொடுத்த ரியாக்சன்..!
தேமுதிக தலைவரான விஜயகாந்த் மறைந்து நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. அவருடைய நினைவு தினத்தை ஆண்டுதோறும் குருபூஜை தினமாக கடைபிடிக்க கட்சியினர் முடிவு செய்தார்கள்
அதன்படி முதலாவது ஆண்டுக்கான பூஜை கோயம்பேட்டில் உள்ள விஜய்காந்தின் நினைவிடத்தில் நடைபெற்றது.
மேலும் விஜயகாந்தின் நினைவு தினத்தை முன்னிட்டு அவருடைய நினைவிடத்திற்கு பிரேமலதா தலைமையில் பேரணிஒன்றும் சென்றுள்ளது. அதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்று உள்ளனர்.
கடந்த ஆண்டு விஜயகாந்தின் மறைந்த உடலை நல்லடக்கம் செய்வதற்காக கொண்டு செல்லும் வழியில் வானத்தில் கருடன்கள் வட்டமிட்டு இருந்தன. அந்த அதிசயம் இன்றைய தினமும் வானில் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி இருந்தன.
இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விமான நிலையத்தில் இருந்து வரும்போது அவரிடம் பேட்டி எடுத்த செய்தியாளர்கள், விஜய்காந்தின் நினைவு தினம் பற்றி பேசியபோது ஓ.. அப்படியா... வாழ்த்துக்கள்... என்று சொல்லியுள்ளார்.
மீண்டும் அவருக்கு விஜயகாந்த் நினைவு தினம் என்பதை நினைவூட்டிய போது அவர் தேங்க்யூ.. தேங்க்யூ.. என சொல்லிவிட்டு சென்றுள்ளார்.
மேலும் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் சூட்டிங் 75 வீதம் நடைபெற்று முடிந்துள்ளதாகவும் செய்தியாளர்களுக்கு நடந்து கொண்டே பதில் அளித்து சென்றுள்ளார்.