‘மறுமலர்ச்சி 2’ படத்தின் மூலம் நாயகன் அவதாரம் எடுக்கும் ராஜ்கிரண்!

 
1

பாரதி இயக்கத்தில் மம்மூட்டி, தேவயானி, ரஞ்சித் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மறுமலர்ச்சி’. 1998-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதற்கு ஒளிப்பதிவாளராக தங்கர் பச்சான், இசையமைப்பாளராக எஸ்.ஏ.ராஜ்குமார் ஆகியோர் பணிபுரிந்தனர்.

தற்போது ‘மறுமலர்ச்சி 2’ படத்தை இயக்கவுள்ளார் பாரதி. இதனை க்ரவுட் பண்டிங் முறையில் தயாரிக்கவுள்ளார். கொரோனா பரவல் காரணமாக இதன் பணிகள் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தன.

தற்போது இந்தப் படத்தில் கதிர்வேல் படையாச்சியார் என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக நடிக்க ராஜ்கிரண் ஒப்பந்தமாகியுள்ளார். இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் இயக்குநர் பாரதி. மேலும், சோழன் என்ற கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் மகனாக நடிக்க முன்னணி நாயகனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

‘மறுமலர்ச்சி 2’ படத்துக்கு எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார். ஏற்கெனவே, "படை படை படையாச்சிடா" என்ற பாடலை உருவாக்கி, படக்குழு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

From Around the web