வலிகளை மௌனத்தின் மூலம் வெளிப்படுத்தும் விதமாக ரக்ஷிதா வெளியிட்ட வீடியோ…!

 
1

‘பிரிவும் சந்திப்போம்’ சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் கன்னட சீரியல் நடிகையான ரக்ஷிதா மகாலட்சுமி…இவரை அப்போதே தமிழ் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர்..

இந்த சீரியல் இவருக்கு மிகப்பெரிய பிரேக்காக அமைந்தது. இதை தொடர்ந்து இவர் நடித்த சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர், போன்ற சீரியல்களும் விஜய் டிவி ரசிகர்கள் மத்தியில் இவருக்கு தனி அடையாளத்தை தந்தது.

ரக்ஷிதா கடந்த 2013 ஆம் ஆண்டு பிரிவோம் சந்திப்போம் சீரியலில் கோ ஸ்டாராக நடித்த தினேஷ் என்பவரை காதலித்த திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் இவர்களுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருந்தாலும், பின்னர் சில பிரச்சனைகள் எழ துவங்கியது இதற்க்கு முக்கிய காரணம், ரக்ஷிதா தொடர்ந்து சீரியலில் நடித்து வந்ததால் குழந்தை பெற்றுக் கொள்ள மறுத்தது என கூறப்பட்டது.

ஆனால் ரக்ஷிதா இதுவரை தன்னுடைய கணவருக்கும், தனக்கும் உள்ள பிரச்சனை குறித்து வெளிப்படையாக பேசியதில்லை.’பிக்பாஸ்’ வீட்டிற்குள் ரக்ஷிதா இருந்தபோது தினேஷ் இது சாதாரண குடும்ப சண்டை தான் என்றும், கண்டிப்பாக இருவரும் சேர்ந்து வாழ்வோம் என தெரிவித்தார்.ஆனால் பிரச்சனை கை மீறி போகவே தற்போது இருவரும் விவாகரத்து பெற்று பிரியும் நிலையில் உள்ளனர்.

அதேபோல் ரக்ஷிதா தினேஷ் மீது அதிகமான கோபத்தில் இருப்பதால், பிக்பாஸ் வீட்டில் கூட கணவர் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.ஆனால் வெளியே இருந்தபடி ரக்ஷிதாவுக்கு தன்னுடைய ஆதரவை தொடர்ந்து தெரிவித்து வந்தார் தினேஷ்.

இந்நிலையில் ரக்ஷிதா நயன்தாராவின் இதுவும் கடந்து போகும் பாடல் பேக் ரவுண்டில் வைத்து தன்னுடைய மன வேதனை மற்றும் வலிகளை மௌனத்தின் மூலம் வெளிப்படுத்தும் விதமாக கண்ணீர் சிந்தி அழுத வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ இந்த வீடியோவை பார்த்து பதறியபடி ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோவுடன் அவர் போட்டுள்ள பதிவில் வலிமையான அனைத்து ஆன்மாவிற்காக கடந்த வருடங்களை நீங்கள் எப்படி கையாண்டீர்கள் என்று பெருமைப்படுங்கள். இந்த மௌன போர்கள் உங்களை தாழ்த்திக் கொள்ள வேண்டிய தருணத்தில் உங்கள் கண்ணீரை துடைத்துக் கொண்டு உங்கள் முதுகில் உங்களை தட்டிக் கொள்ளுங்கள் பாடலில் ஆழமாக போகிறேன் கண்களை நிறைக்கும் அந்த மந்திர வார்த்தைகள் என தெரிவித்துள்ளார்…இதற்கு பலர் தங்கள் ஆறுதலை சொல்லி வருகின்றனர்…

From Around the web