நீண்ட நாள் காதலனை கரம் பிடித்தார் ரகுல் ப்ரீத் சிங் ! அசரவைக்கும் திருமண புகைப்படங்கள்..!

 
1

தமிழில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான தடையற தாக்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்  ரகுல் ப்ரீத் சிங் . தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்துள்ள ரகுல் ப்ரீத் சிங் கார்த்தியுடன் இணைந்து தேவ், தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் சூர்யாவுடன் 'என்ஜிகே' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவரும் தயாரிப்பாளர் ஜாக்கி பாக்னானி என்பவரும் காதலித்து வந்தனர். இதனையடுத்து கடந்த சில மாதங்களாகவே இவர்களின் திருமணம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் கோவாவில் இவர்களின் திருமணம் நடந்து முடிந்துள்ளது.இவர்கள் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.

இந்த நிலையில், நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது காதலனான  தயாரிப்பாளர் ஜாக்கி பக்நானி  என்பவரை திருமணம் செய்துள்ளார். தற்போது இவர்களுடைய திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.இந்த திருமணத்தில் இரு வீட்டாரையும் சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் மற்றும் திரையுலகை சார்ந்த ஷில்பா ஷெட்டி, வருண் தவான், அனன்யா பாண்டே, ஷாகித் கபூர், சாரா அலிகான் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

From Around the web