தொப்புள் கொடி ரத்தத்தை சேமித்த ராம் சரண்: எதற்கு தெரியுமா..??

பதினோரு ஆண்டுகள் கழித்து தந்தையாகியுள்ள நடிகர் ராம் சரண், தனது மகளின் தொப்புள் கொடி ரத்தத்தை சேமித்து வைத்துள்ளார். அதுதொடர்பான காரணங்களை தெரிந்துகொல்வோம்.
 
ram charan

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம் சரணுக்கும், அப்பல்லோ குழுமத்தின் ஒரே வாரிசாக இருக்கும் உபாசனாவுக்கு கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ராம் சரண் தொடர்ந்து படங்களிலும், உபாசனா தனது வணிகத்திலும் பிஸியாகிவிட்டனர்.

தொடர்ந்து தொழில்முறை வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்ததால், அவர்களால் குழந்தை உள்ளிட்ட தேவைகளுக்கு இடம் கொடுக்க முடியவில்லை. தற்போது 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதையடுத்து குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்டோர் பலர் ராம் சரண் மற்றும் உபாசனாவுக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர். இந்நிலையில் குழந்தையின் தொப்புள்கொடி ரத்தத்தை ராம்சரண் சேமித்து வைத்துள்ளார். 

எதிர்காலத்தில் குழந்தைக்கு உடல்நல பிரச்னைகள் ஏற்பட்டால் அதை போக்குவதற்கு இந்த தொப்புள்கொடி ரத்தம் பயன்படும். லியூக்கீமியா, தலசீமியா, சிக்கிள் செல் அனீமியா, மைலோமாஸ் மற்றும் லிம்ஃபோமா போன்ற நோய்களை இதன்மூலம் தடுக்கலாம். 

தொப்புள் கொடி ரத்தத்தை சேமிப்பதற்கு கொஞ்சம் செலவு செய்ய வேண்டும். சுமார் 25 ஆண்டுகள் வரை பாதுகாக்க குறைந்தது ரூ. 55 ஆயிரம் கட்டணம் பெறப்படுகிறது. அதுவே 75 ஆண்டுகள் வைத்து சேமித்து வைக்க ரூ. 1 முதல் ரூ. 2 லட்சம் வரை செலவாகும். இந்த தொப்புள் கொடி ரத்தத்தை எடுப்பதற்கும் குருத்தணுக்களை பிரித்தெடுப்பதற்குமான கட்டணங்களை காப்பீடு மூலம் தான் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 


 

From Around the web