ராமதாஸ் மற்றும் நடிகர் சந்தானம் திடீர் சந்திப்பு..!
 

 
ராமதாஸ் மற்றும் சந்தானம்

பாமக நிறுவனர் ராமதாஸை நடிகர் சந்தானம் நேரில் சந்தித்தது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழில் நகைச்சுவை ஹீரோவாக நடித்து தனி முத்திரை பதித்து வருபவர் சந்தான. இவருடைய நடிப்பில் டிக்கிலோனா, சர்வர் சுந்தரம்,சபாபதி உள்ளிட்ட படங்கள்  வெளியீட்டுக்கு தயாராகவுள்ளன.

அதிலும் சமீபத்தில் வெளியான ‘டிக்கிலோனா’ பட டிரெய்லர் ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பட டிரெய்லரில் மாற்றுத்திறனாளிகள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி பலரும் மாற்றுக்கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸின் பேத்தியும், அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணியின் மகளுமான சங்கமித்ரா - சங்கருக்கு திருமணம் நடந்தது. இவர்களுடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

அந்நிகழ்வில் நடிகர் சந்தானம் ராமதாஸை நேரில் சந்தித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நீண்ட நாட்களுக்கு பிறகு ஐயாவை சந்தித்ததில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார். 

From Around the web