ராமராஜனுக்கு ஜோடியாகும் மீனா..!!

அடுத்ததாக ராமராஜன் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு மீனாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் கூறப்படுகிறது.
 
meena

சினிமாவில் நடிக்காமல் பல ஆண்டுகளாக விலகி இருந்த நடிகர் ராமராஜன், சாமானியன் என்கிற படம் மூலம் மீண்டும் நடிப்புக்கு திரும்பியுள்ளார். விரைவில் இந்த படம் வெளிவரவுள்ளது.

இதையடுத்து அவர் ‘உத்தமன்’ என்கிற படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு மீனாவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விரைவில் இதுதொடர்பாக ஏதேனும் அப்டேட் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவின் பல ஆண்டுகளாக முன்னணி வரிசையில் இருந்த மீனாவுக்கும், பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சாகர் என்பவருக்கும் 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு நைனிகா என்கிற மகள் இருக்கிறார்.

இந்நிலையில் கடந்தாண்டு உடல்நலக்குறைவால் சாகர் உயிரிழந்தார். இதையடுத்து அவர் எந்தவிதமான படங்களிலும் நடிக்காமல் இருந்தார். தற்போது அவர் மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளார். அதை பயன்படுத்திக் கொள்ள உத்தமன் படக்குழு முடிவு செய்து, அதற்கான பணிகளை துவங்கியுள்ளது.
 

From Around the web