நயன்தாரா, ஜோதிகாவை ஓரம்கட்ட முனைப்பு காட்டும் ரம்யா கிருஷ்ணன்..!

 
ரம்யா கிருஷ்ணன்

தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் நடித்து வரும் நயன்தாரா மற்றும் ஜோதிகாவின் மார்கெட்டை பிடிக்க ரம்யா கிருஷ்ணன் முனைப்பு காட்டி வருகிறார்.

நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் திரையுலகில் பிரவேசித்தார் ஜோதிகா. அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து ஜோதிகா தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார்.

இவருக்கு முன்னதாக இந்த டிரெண்டை துவங்கி வைத்து வெற்றிநடை போட்டவர் நயன்தாரா. இவர் தனி ஆளாக நடிக்கும் படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உண்டு. அதை தொடர்ந்து ஜோதிகாவும் இந்த லிஸ்டில் சேர்ந்துகொள்ள, நயன்தாரா மற்றும் ஜோதிகா இருவரும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் அதிகம் நடித்து வருகின்றனர்.

பாகுபலி படத்தை தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ரம்யா கிருஷ்ணன், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் நடிக்க திட்டமிட்டு வருகிறார். அதற்காக அவர் கதைகளும் கேட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்தில் பிரபாஸுக்கு மூத்த சகோதிரியாக ஜோதிகா நடிப்பதாக சொல்லப்பட்டது. அதற்கு மறுப்பு தெரிவித்தனர் ஜோதிகா தரப்பினர். தற்போது அந்த கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் நடிக்க ரம்யா முனைப்பு காட்டி வருகிறார். விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

From Around the web