அட்லீ - ஷாரூக்கான் படத்தில் இணைந்த ராணா டகுபதி..?

 
பாலிவுட் படம்

பாலிவுட்டில் ஷாரூக்கானை வைத்து அட்லீ இயக்கி வரும் புதிய படத்தில் ராணா டகுபாத்தி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான அட்லீ தற்போது பாலிவுட்டில் முதல்முறையாக படம் இயக்கி வருகிறார். இதில் ஷாரூக்கான் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நயன்தாரா நடித்து வரும் நிலையில், சானியா மல்ஹோத்ரா மற்றும் ப்ரியாமணி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை வெறும் 6 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயத்தில் ஷாரூக்கான் இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

இதன்மூலம் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இப்படத்துக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தெலுங்கு நடிகர் ராணா டகுபாத்தி முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார். அவர் வில்லனாக நடிப்பதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் இந்த படத்தின் காமெடி கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிப்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட் படமாக தயாரானாலும், இந்த படம் தென்னிந்திய சந்தையை குறிவைத்து உருவாக்கப்பட்டு வருகிறது.
 

From Around the web