தீபிகா படுகோன் கணவருடன் சேர்ந்து நடிக்கும் ரன்பீர் கபூரின் முன்னாள் காதலி..!

 
ரன்வீர் சிங் மற்றும் கத்ரீனா கைஃப்

மஹாராஷ்டிரா அரசு மாநிலம் முழுவதும் ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. விரைவில் ஷூட்டிங் போகும் ஆயத்தப் பணிகளில் பாலிவுட் பிரபலங்கள் தயாராகி வருகின்றனர். 

இந்நிலையில் கத்ரீனா கைஃப், ரன்வீர் சிங், திரைக்கதை எழுத்தாளர் ரீமா ககிதி, நடிகர் அபிதாப் பச்சனின் மகள் ஸ்வேதா பச்சன் நந்தா உள்ளிட்ட பாலிவுட் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் இயக்குநர் சோயா அக்தர் வீட்டிலிருந்து புறப்படும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இதன்மூலம் சோயா அக்தர் அடுத்ததாக ரன்வீர் சிங் மற்றும் கத்ரீனா கைஃப் இணைந்து நடிக்கும் படத்தை துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த படத்திற்கான வசனங்களை வாசித்துப் பார்க்கும் பயிற்சி வகுப்பு தான் சோயா அக்தர் வீட்டில் நடந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாலிவுட் ஊடகங்கள் மூலம் கிடைக்கும் தகவலின்படி இயக்குநர் சோயா அக்தர் வீட்டில் ஏற்கனவே ரன்வீர், ரீமா மற்றும் ஸ்வேதா ஆகியோர் இருந்ததாகவும் ஒரு மணிநேர தாமத்திற்கு பிறகு கத்ரீனா அங்கு வந்ததாகவும் செய்திகள் வெளியிட்டுள்ளன.
இவர்களுக்கு இடையிலான இந்த சந்திப்பு ஒன்றரை மணிநேரங்கள் நீடித்துள்ளன. 

ஒருவேளை சோயா அக்தரின் படத்தில் ரன்வீர் சிங், கத்ரீனா கைஃப் இணைந்து நடிப்பதில் பெரிய ஆச்சரியம் இல்லை. ஆனால்  அமிதாப்பின் மகளான ஸ்வேதா பச்சன் நந்தா எதற்காக அந்த சந்திப்பில் கலந்துகொண்டார் என்பது தான் புரியதா புதிராக உள்ளது.

ஒருவேளை சோயா அக்தர் இயக்கும் படத்தில் ஸ்வேதாவுக்கு முக்கிய கதாபாத்திரம் வழங்கப்பட்டு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ஸ்வேதா மற்றும் சோயா இருவரும் நெருங்கிய தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது.  
 

From Around the web