சீதை படத்தில் ராவணனாக நடிக்கும் ரன்வீர் சிங்- விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

 
ரன்வீர் சிங்

இந்தியில் தயாராகும் ‘ராமயாண’ கதையில் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய சினிமாவில் ராமாயணம் மற்றும் மஹாபாரதக் கதைகளை திரைப்படமாக முயல்வது தொன்று தொட்டு நடந்து வருகிறது. தலைமுறைகள் மாறிவிட்டாலும் சினிமா துறையிலும் இந்த பாரம்பரியங்கள் தொடர்கின்றன.

 தெலுங்கு மற்றும் தமிழில் ராமாயணத்தின் ஒரு பகுதியை அடிப்படையாக வைத்து ஆதிபுருஷ் என்கிற படம் தயாராகி வருகிறது. இதில் பிரபாஸ், சைஃப் அலிகான், கீர்த்தி சனோன் நடிக்கின்றனர். ரூ. 500 கோடி செலவில் இந்த படம் உருவாக்கப்படவுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல மலையாளத்தில் மகாபாரத்தின் ஒரு பகுதியை படமாக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வரிசையில் இந்தியில் சீதா என்கிற பெயரில் ராமாயணத்தின் கதை படமாக்கப்படவுள்ளது. சீதையின் பார்வையின் கதை நகர்வது போன்ற பாணியில் இந்த படம் தயாராகிறது.

இந்த படத்தில் சீதையாக கரீனா கபூர் நடிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. மேலும் படத்தில் நடிக்கவைக்க ஆலியா பட் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ராவணன் வேடத்தில் ரன்வீர் சிங்கை நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தை அலாவ்கிக் தேசாய் இயக்கவுள்ளார். 
 

From Around the web