சினிமா ஆணாதிக்கம் நிறைந்த துறை - நடிகை ராஷி கண்ணா !!

 
1

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் நாயகியாக வலம் வருபவர் ராஷி கண்ணா. ‘தோழி ப்ரேமா’, 'பெங்கால் டைகர்’, 'வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தமிழிலும் ‘அயோக்யா’, ‘சங்கத்தமிழன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் 'அரண்மனை 3' படத்தில் வருகிறார்.

அண்மையில் ஐஏஎன்எஸ் நிறுவனத்துக்கு நடிகை ராஷிகன்னா அளித்துள்ள பேட்டியில், “எனக்கு ஊஹலு குஸகுஸலடே” தெலுங்கு படத்தில் நல்ல கதாபாத்திரம் அமைந்து திறமையான நடிகை என்ற பெயரும் கிடைத்தது. அதன்பிறகு வணிக பட வாய்ப்புகளே வந்தன. சினிமா துறை ஆணாதிக்கம் உள்ள துறையாகவே இருக்கிறது.

ஆனாலும் பெண்கள் திறமையை வெளிப்படுத்தி வளர்ந்து கொண்டு இருக்கிறார்கள். அனுஷ்கா, சமந்தா மாதிரி திறமையான நடிகையாக இருந்தால் மட்டுமே சினிமாவில் நிலைக்க முடியும். அவர்கள் இருவருமே தென்னிந்திய நடிகைகள் மீதான மக்களின் பார்வையை மாற்றி இருக்கிறார்கள். அவர்களுக்கு முன்புவரை நடிகைகள் என்றால் பார்க்க அழகாக இருக்க வேண்டும். பாடல் காட்சிகளில் நடனம் ஆட வேண்டும் என்ற நிலைமைதான் இருந்தது.

இப்போது நன்றாக நடிக்க தெரிய வேண்டும் என்ற நிலைமைக்கு மாறி இருக்கிறது. தென்னிந்திய திரையுலகில் திறமையான நடிகைகள் இருக்கிறார்கள். நான் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகமாக இருக்கிறது” என்றார்.

From Around the web