அசரடிக்கும் ராஷ்மிகா மந்தனாவின் ’புஷ்பா’ பட ஃபர்ஸ்ட் லுக்..!
புஷ்பா படத்தில் ராஷ்மிகா நடித்து வரும் ஸ்ரீவள்ளி என்கிற கதாபாத்திரத்தின் முதல் பார்வை போஸ்டர் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநரான சுகுமார் ‘புஷ்பா’ படத்தை இயக்கி முடித்துள்ளார். அல்லு அர்ஜுன், ஃபகத் பாசில், ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்து வரும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார்.
முன்னதாக புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன், ஃபகத் பாசில் உள்ளிடோருடைய கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கதாநாயகி ராஷ்மிகா மந்தனாவின் ’ஸ்ரீவள்ளி’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ரசிகர்கள் மிகுந்த வரவேற்பை அளித்து வருகின்றனர்.
மொத்தம் இரண்டு பாகங்களாக இப்படம் வெளியாகிறது. அதில் முதல் பாகத்துக்கு ‘புஷ்பா’ தி ரைஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த முதல் பாகத்துக்கான ஷூட்டிங் நடந்து முடிந்துள்ளதை அடுத்து, கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு இப்படம் வெளியாகிறது.
 - cini express.jpg)