ராஷ்மிகாவிடம் ரூ. 80 லட்சம் மோசடி- கூடவே இருந்து கழுத்தறுத்த துரோகி...!!

விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்ததை அடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனா ‘நேஷ்னல் கிரெஷ்’ என்று ஊடகங்கள் குறிப்பிட்டன. விரைவில் இந்தியில் ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகும் அனிமல் படத்தில் நடிக்கிறார்.
 
Rashmika

நடிகை ராஷ்மிகா மந்தனா உழைத்து சம்பாதித்த பணத்தில் இருந்து ரூ. 80 லட்சம் மோசடி செய்ததாக சமீபத்தில் செய்தி வந்தது. அவரை ஏமாற்றியவர் வேறு யாருமல்ல, அவருடைய மேலாளர்தான். இந்த மோசடி குறித்து ராஷ்மிகாவுக்கு தெரியவந்ததும், மேலாளர் வேலையில் இருந்து தூக்கிவிட்டார். எனினும் இதுதொடர்பாக ராஷ்மிகா தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை.

கன்னட சினிமாவில் நடிகையாக கால் பதித்த ராஷ்மிகா, தெலுங்கு சினிமாவில் அறிமுகமானதும் தென்னிந்தியளவில் புகழடைந்தார். அதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்த அவருக்கு இந்திப் பட வாய்ப்புகள் குவிந்தன. விஜய் உடன் அவர் நடித்த வாரிசு படம் ராஷ்மிகாவை தேசியளவில் டிரெண்டாக்கியது. இதையடுத்து அவர் பாலிவுட்டில் ரன்பீர் கபூர் நடிப்பில் தயாராகும் ‘அனிமல்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதனுடைய ஷூட்டிங் மும்பையில் நடந்து வரும் நிலையில், ரூ. 80 லட்சம் பணத்தை ராஷ்மிகாவிடம் திருடப்பட்டதாக செய்திகள் வெளியான. அவருடைய மேலாளர் தான் இந்த பணத்தை திருடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தெரியவந்ததும் ராஷ்மிகா கடும் கோபம் அடைந்து அந்த மேலாளரை வேலையில் இருந்து நீக்கியுள்ளார். ரஷ்மிகா மந்தனாவுடன் மேலாளர் நீண்ட நாட்களாக பணியாற்றி வந்துள்ளார்.

அவர் நடிகைக்கு தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை திருடி வந்துள்ளார். இதை பல ஆண்டுகளாக அவர் தொடர்ந்து செய்துள்ளார். இந்த விவகாரத்தை ராஷ்மிகா பெரிய பிரச்னையாக்க விரும்பவில்லை, அதனால் அவர் மோசடி சம்பவம் குறித்து ஊடகங்களுக்கு தெரியப்படுத்த விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. 

தற்போது அவர் ன்பீர் கபூருடன் நடிக்கவிருக்கும் அனிமல் படத்தில் பிஸியாக இருக்கிறார். ராஷ்மிகாவின் நடிப்பில் உருவாகியுள்ள ப்ரீ பட டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் புஷ்பா 2 மற்றும் மற்றொரு இந்திப் படத்தில் நடிக்க ராஷ்மிகா தயாராகி வருகிறார்.


 

From Around the web