வாழ்த்த வந்த ராஷ்மிகா மந்தனா காலில் விழுந்த மாப்பிள்ளை..! 

 
1

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் கமிட்டாகி நடித்து வருகிறார் ராஷ்மிகா. தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் மிகவும் பிசியாக காணப்படுகிறார். அடுத்தடுத்த போட்டோஷுட்களை எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், தனது உதவியாளர் சாய் பாபுவின் திருமண நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது அவர் மணமக்களுக்கு அட்சதை தூவி வாழ்த்தினார். அப்போது, ஓவராக மகிழ்ச்சி அடைந்த மாப்பிள்ளை பொத்துனு ராஷ்மிகாவின் காலில் விழுந்தார்.

மாப்பிள்ளை விழுந்ததால், வேறு வழியில்லாமல் மணப்பெண்ணும் அவரது காலில் விழுந்தார். இதை சற்றும் எதிர்பாராத ராஷ்மிகா என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்தார். அட்சதை தூவி நல்லா இருங்க என்று மனதார வாழ்த்தினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


 

From Around the web