வீட்டுப் பணியாளர்கள் காலில் விழுவேன்- ராஷ்மிகா உருக்கம்..!!

கார்த்தி நடிப்பில் வெளியான ‘சுல்தான்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ராஷ்மிகா மந்தனா அறிமுகமானார். முன்னதாக கன்னட திரையுலகில் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் ‘கிரிக் பார்ட்டி’ படத்தில் அறிமுகமாகி, அங்கு முன்னணி நடிகையாக மாறினார். அதை தொடர்ந்து தெலுங்கில் ‘கீதா கோவிந்தம்’ படத்தில் நடித்து அங்கும் முன்னணி நடிகையாக மாறினார்.
அதற்கு பிறகு தான் தமிழில் அவர் நடித்தார். தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ படம் ராஷ்மிகா மந்தனாவை இந்திய முழுக்க பிரபலப்படுத்தியது. இதன்மூலம் இந்தி சினிமாவில் இருந்து வாய்ப்புகள் அவருக்கு குவிய ஆரம்பித்தன. சித்தார்த் மல்கோத்ராவுடன் அவர் ஜோடியாக நடித்த மிஷன் மஜ்னு படம் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.
முன்னதாக நடைபெற்ற ப்ரோமோஷன் பணிகளின் போது, தென்னிந்திய சினிமாவை அவமதிக்கும் கருத்துக்களை ராஷ்மிகா முன்வைத்தார். இதற்கு ரசிகர்கள் கடுமையாக எதிர்வினையாற்றினார்கள். அவருடைய பேச்சை ட்ரோல் செய்து சமூகவலைதளங்களில் வீடியோ வெளியிட்டார்கள்.
எனினும் அவர் எதிர்பார்த்த அளவுக்கு பாலிவுட்டில் இருந்து வாய்ப்புகள் வரவில்லை. இதனால் மீண்டும் அவருடைய கவனம் தென்னிந்திய சினிமாவை நோக்கி திரும்பியுள்ளது. தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே தனக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரை போக்குவதற்கான செயல்பாடுகளை அவர் துவங்கியுள்ளது. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் மிகவும் உருக்கமாக அவர் பேசியுள்ளார்.
எப்போதும் எனக்கு டைரி எழுதுவது பிடிக்கும். ஷூட்டிங் முடித்துவிட்டு வீடு திரும்பும் போது, வீட்டிலுள்ள அனைவருடைய கால்களிலும் விழுந்து ஆசி வாங்குவேன். அதில் நான் வேறுபாடு காட்டுவது கிடையாது. எனது உதவியாளர்களின் பாதங்களையும் தொட்டு ஆசி வாங்குவேன்.
எனது வீட்டில் எல்லோரும் எனது நலன் விரும்பிகள் தான். அதனால் அவர்கள் எல்லோருமே எனக்கு முக்கியமானவர்கள். இதுதான் நான் என்று அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இதற்கு அவர் எதிர்பார்த்த படி, ரசிகர்கள் மீண்டும் ராஷ்மிகாவை கொண்டாடுவார்களா என்று தெரியவில்லை. நாம் பேச்சிலும் செயலிலும் கவனம் இருந்தால், எல்லாம் சவுக்கியமாகவே இருக்கும்.