ஆசையா சிக்கன் சாப்பிட்டது ஒரு குற்றமா? ராஷ்மிகாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்..!!
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைத்துறைகளில் பரவலாக நடித்து வருகிறார். தெலுங்கில் ’புஷ்பா 2’ மற்றும் தமிழில் ’ரெயின்போ’ மற்றும் இந்தியில் ரன்பீர் கபூர் ஜோடியாக ’அனிமல்’ ஆகிய படங்களில் தற்போது அவர் நடித்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் அளித்த பேட்டியில் தனக்கு எப்போதும் சைவ உணவுகள் தான் பிடிக்கும். அசைவ உணவுகளை தான் விரும்புவது இல்லை என்று கூறியிருந்தார். ஆனால் அண்மையில் வெளியான ஒரு விளம்பரத்தில் சிக்கன் சாப்பிடுவது போல ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
இதனால் அந்த விளம்பரமும் ராஷ்மிகா மந்தனா சிக்கன் சாப்பிடும் காட்சியும் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளார். தனக்கு எப்போதும் சைவ உணவுகள் தான் பிடிக்கும் என்று ராஷ்மிகா மந்தனா பொய் சொல்லியுள்ளார். எதற்காக அவர் இப்படி கூற வேண்டும். யாருக்காக தன்னை சைவ உணவு விரும்பியாக அடையாளப்படுத்திவிட்டு, அசைவம் சாப்பிடுவது போன்று நடித்துள்ளார்? என சகட்டு மேனிக்கு நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதேசமயத்தில் சைவ உணவுகளை விரும்புவதாக சொன்னது ராஷ்மிகாவின் உரிமை. அதேபோன்று அவர் அசைவம் சாப்பிடுவது போன்ற காட்சியில் நடித்ததும் அவரது உரிமையே. அதனால் அவரது சொந்த விருப்பங்களில் யாரும் தலையிடக் கூடாது என்கிற கருத்துகளை ஒருசிலர் முன்வைத்து வருகின்றனர்.
 - cini express.jpg)