விஜய் தேவரகொண்டாவுக்கு வாழ்த்து கூறாத ராஷ்மிகா மந்தனா..!!

அர்ஜுன் ரெட்டி படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் உச்சம் தொட்ட நடிகர் விஜய் தேவரகொண்டா. அதையடுத்து வெளியான கீதா கோவிந்தம் படமும் பெரியளவில் வரவேற்பை பெற்றது. அந்த படத்தின் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்தவர் ராஷ்மிகா மந்தனா.
அந்த படத்துக்கு பிறகு டியர் காம்ரேட் என்கிற படத்தில் மீண்டும் இருவரும் இணைந்து நடித்தனர். அந்த படத்தில் மிகவும் நெருக்கமான காதல் காட்சிகள் இருந்தன. இதனால் அவர்கள் இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் பரவ ஆரம்பித்தன.
அதை உறுதி செய்யும் விதமாக இருவரும் வெவ்வேறு தருணத்தில் இன்பச்சுற்றுலா சென்றுவிட்டு, ஒரே இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தங்களுடைய சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டனர். இதன்மூலம் அவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றது உறுதியானது.
எனினும் கடந்த சில மாதங்களாக ஒருவரையொருவர் கண்டுகொள்ளாமல் இருந்தனர். பெரியளவில் இருவரும் இணைந்து எங்கேயும் பங்கேறாமல் இருந்தனர். சமூகவலைதளங்களில் பரஸ்பர நட்பு பரிமாற்றம் கூட இல்லாமல் இருந்தது. இதனால் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா பிரிந்துவிட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் நேற்று விஜய் தேவரகொண்ட தனது 34-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பல பிரபலங்கள் வாழ்த்துகளை பதிவிட்ட நிலையில், ராஷ்மிகா மந்தனாவிடம் இருந்து எந்தவிதமான வாழ்த்தும் வரவில்லை. இதனால் இருவருடைய காதல் முறிவு தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.