துல்கர் சல்மான் படத்தில் 2-வது கதாநாயகியாக நடிக்கும் ராஷ்மிகா..?
 

 
ராஷ்மிகா மந்தனா
அல்லு அர்ஜுனுடன் புஷ்பா- 1 படத்தில் நடித்து முடித்துள்ள ராஷ்மிகா மந்தனா, அடுத்ததாக துல்கர் சல்மான் நடிக்கும் புதிய புதிய படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான துல்கர் சல்மான் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி வரும் படங்களில் நடித்து வருகிறார். அதேபோல ராஷ்மிகா மந்தனாவும் பல்வேறு மொழிப் படங்களில் நடிக்கிறார். இதன்மூலம் இருவரும் பான் இந்தியா நடிகர்களாக மாறிவிட்டனர்.

இந்த பான் இந்தியா நடிகர்கள் இருவரும் தெலுங்கில் தயாராகும் ‘லெப்டினண்ட் ராம்’ என்கிற படத்தில் இணைந்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தில் கதாநாயகியாக மிருனால் தாகூர் என்பவர் நடித்து வருகிறார்.

அவரை தொடர்ந்து மற்றொரு கதாநாயகி கதாபாத்திரத்தில் நடிபப்தற்கு படக்குழு ராஷ்மிகா மந்தனாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் சிறப்பு தோற்றமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

படத்திற்கு மிகவும் முக்கியத்துவமான கதாபாத்திரம் என்பதால், ராஷ்மிகாவும் ‘லெப்டினண்ட் ராம்’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டாராம். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகவுள்ளது.

From Around the web