”அமிதாப் பச்சனிடம் ஒழுங்காக இரு” ராஷ்மிகாவுக்கு பெற்றோர்கள் அறிவுரை..!

 
”அமிதாப் பச்சனிடம் ஒழுங்காக இரு” ராஷ்மிகாவுக்கு பெற்றோர்கள் அறிவுரை..!

தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘சுல்தான்’ படம் மூலம் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தற்போது இரண்டு இந்திப் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகாவைச் சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கன்னட சினிமாவில் வளர்ந்து வரும் நேரத்தில் தெலுங்கில் ‘கீதா கோவிந்தம்’ படத்தில் அறிமுகமானார். அதை தொடர்ந்து அவருடைய திரை வாழ்க்கையே மாறிவிட்டது. தெலுங்கு சினிமாவில் தற்போது அவர் தான் முன்னணி நடிகை.

பல வருடங்கள் தெலுங்குப் படங்களில் நடித்துவிட்டு கடந்த மாதம் வெளியான சுல்தான் படம் மூலம் தமிழில் கால்பதித்தார் மந்தனா. தற்போது அவர் இந்தியில் தயாராகும் இரண்டு படங்களில் நடிக்க ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அதில் ஒரு படத்தில் அமிதாப் பச்சனுடன் நடிக்கிறார். இதுகுறித்து அவர் தன்னுடைய பெற்றோரிடம் கூறிய போது பல அறிவுரைகளை வழங்கியதாக ஒரு ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். ஆசிரியர் முன்பு இருக்கும் மாணவி மாதிரி நடந்துகொள்ள வேண்டும் என பெற்றோர் தெரிவித்ததாக கூறியுள்ளார் ராஷ்மிகா.
 

From Around the web