"பயர்" படத்தால் சர்ச்சையில் சிக்கிக்கொண்ட ரட்சிதா..!

 
1

தெய்வத்திருமகள் என்ற சீரியல் மூலம் பிரபலமாகி தற்போது நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் வாணி போஜன்! இவரது வரிசையிலேயே தற்போது பல சின்னத்திரை நடிகர்கள் சினிமா பக்கம் எட்டிப் பார்க்க ஆரம்பித்துள்ளனர் அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் ஆக ஓடிக்கொண்டிருந்த சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிரபலமான ரட்சிதா மகாலட்சுமி தற்போது வெள்ளித்திரை பக்கம் திரும்பி உள்ளார் என்பது அனைவரும் தெரிந்த ஒன்று.

 

முன்னதாக சரவணன் மீனாட்சி தொடருக்குப் பிறகு இவர் நடித்த பெரும்பாலான சீரியல் அந்த அளவிற்கு வரவேற்பை பெறாமல் இருந்து வந்தது அதே சமயத்தில் ரட்சிதா தனது காதல் கணவருடன் பிரிந்த செய்தியும் பரபரப்பாக வெளியானது. இருவரும் எதற்காக பிரிந்தார்கள் என்பது இதுவரையில் தெரிவிக்கப்படாமல் இருக்கிறது. முன்னதாக தனியார் தொலைக்காட்சியில் தற்போது பிரபலமாக வருடம் வருடம் ஒளிபரப்பாக்கப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதலில் கலந்து கொண்ட ரட்சிதா தனது கணவரை குறித்த எந்த ஒரு தகவலையும் தன் கணவரை பற்றிய பேச்சையும் அவர் எடுக்கவில்லை! இவருக்குப் பிறகு அடுத்த சீசனில் பங்குபெற்ற ரட்சிதாவின் கணவரான தினேஷ் பங்குபெற்று தனது மனைவியின் தன்னை விட்டுப் பிரிந்து இருப்பது குறித்த உருக்கமான கருத்துக்களை கூறியிருந்தார். மேலும் தினேஷின் அம்மாவும் ரட்சிதா எதற்காக தினேஷ் விட்டு பிரிந்தார் என்பது தெரியவில்லை இருப்பினும் ரட்சிதாவை எங்களது மகளாகவே பார்க்கிறோம் மீண்டும் அவர் தங்களிடம் திரும்பி வர வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த செய்திகளும் வெளியானது. இருப்பினும் ரட்சித்தா மீண்டும் தினேஷ் உடன் இணைவது குறித்த எந்த ஒரு கருத்தையும் வெளியிடவில்லை. 

மாறாக திருமண வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டங்கள் குறித்த கருத்துக்களையும் பெண்கள் படும் துயரங்கள் குறித்த கருத்துக்களையும் இவர் பதிவிட்டு வந்தது அவரது ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து ரட்சிதா திரைப்படங்களில் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்புகளும் கேள்விகளும் மேலோங்கி இருந்த நிலையில் பயர் என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரையில் ரட்சித்தா அறிமுகமாக உள்ளதாக செய்திகள் வெளியானது. மேலும் நேற்றைய தினம் ரட்சிதாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது முன்னிட்டு ரட்சிதாவின் பிறந்த நாளில் ஒரு சர்ப்ரைஸை வழங்க வேண்டும் என முடிவு செய்த படத்தின் தயாரிப்பாளர் பயர் திரைப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார். அந்த டீசரில் இதுவரை குடும்ப குத்துவிளக்காக புடவையில் நடித்து வந்த ரட்சிதாவை முற்றிலும் வேறு விதமாக மாற்றி கவர்ச்சிகரமாக இப்படத்தில் காட்டி உள்ளனர். இதனைப் பார்த்த அவரது ரசிகர்கள் பலர் இது நம்ம ரச்சித்தா தானா என்ற வகையில் ஷாக்கில் உறைந்து போய் உள்ளனர். அதோடு அந்த டீசரின் இறுதியில் ஒரே ஒரு ஷர்டை மட்டும் ரசித்தா அணிந்து கொண்டு நிற்கும்பொழுது அருகில் ஹாப்பி பர்த்டே ரட்சிதா என்ற வாழ்த்தும் இடம்பெற்று இருப்பது பலரது கடுப்பையும் ஏற்றி உள்ளது. மேலும் பிறந்தநாளுக்கு இப்படி ஒரு வாழ்த்தா கொடுக்க வேண்டும் இது என்ன அவ்வளவு நல்லாவா இருக்கு என்ற விமர்சனங்களை தற்போது பல நெடிசன்கள் முன்வைத்து வருகின்றனர்.

From Around the web