ஆபாசமாக பேசும் கணவர்- பிக்பாஸ் புகழ் ரட்சிதா போலீஸில் புகார்..!!

தமிழில் ஒளிப்பரப்பான பிரிவோம் சந்திப்போம் தொடர் மூலம் பிரபலமானவர் ரட்சிதா. இவர் சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற ஹிட் சீரியல்களில் நடித்து தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
கடந்த பிக்பாஸ் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு நிகழ்ச்சியில் இறுதிவரை இருந்தார். சீரியல் நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்துகொண்ட ரட்சிதா, தற்போது பிரிந்து வாழ்வதாக செய்திகள் வெளியாகின.
அதை உறுதிப்படுத்தும் விதமாக ரட்சிதா பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது ஊடகங்களை சந்தித்த தினேஷ், மனைவி ரட்சிதாவுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக கூறினார். ஆனால் அதை ரட்சிதா தரப்பில் ஏற்கவில்லை.
இந்நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு மாங்காடு போலீஸ் நிலையத்துக்கு சென்ற ரட்சிதா, தன் கணவர் தன்னிடம் செல்போனில் ஆபாசமாக பேசுவதாகவும், அடிக்கடி போன் செய்து மிரட்டுவதாகவும் கூறி புகார் அளித்துள்ளார். இதுகுறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
முன்னதாக ரட்சிதாவின் தோழியும், அவருக்கு பின்னணி பேசுபவரான ஐஜி, தினேஷ் மீது புகார் கூறியிருந்தார். தற்போது அவரை தொடர்ந்து ரட்சிதாவும் புகார் தெரிவித்துள்ளார். இது சின்னத்திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.